என் வலைத்தளத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி

Wednesday, December 19, 2012

2012 டிசம்பர் 09 ஆம் திகதி ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்

2012 டிசம்பர் 09 ஆம் திகதி ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்த எனது நேர்காணல்

எதிர்மறை விமர்சனங்களால் புகழ்பெறவே இன்று பலரும் எழுதுகின்றனர்

நேர்கண்டவர் - ரேணுகா பிரபாகரன்

அவரவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தின் குறை நிறைகளையும் இலக்கியத்தினூடாக தெரியப்படுத்த முடியும். சமாதானத்துக்கு இலக்கியம் ஒரு பாலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. மொழி பெயர்ப்புத் துறை சார்ந்த புத்தகங்களை வெளியிடுபவர்கள் ஏனைய சமூகங்களின் பண்புகள். கலாசாரம்ஆசாபாசங்கள்உணர்வுகள் போன்றவற்றை நமக்கு தெரியப்படுத்தும் ஆசான்களாக இருக்கிறார்கள். எனவே சமூகத்தின் கஷ்டத்தையோ மகிழ்வையோ ஒரு எழுத்தாளன் தமது இலக்கியத்தினூடாக தெரியப்படுத்துவதனால் தான் இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் கோட்பாடுகள்விழுமியங்கள்வரையறைகள் போன்ற எல்லா விடயங்களும் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன. சொல்லப்பட்டும் வருகின்றன. சமூகத்தைத் தவிர்த்து படைப்புக்ளைப் படைப்பவன் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது. எனவே எமது பிரச்சினைகளை எமது படைப்புக்கள் பேச வேண்டும் என்கிறார் இளம் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா.

வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.

நீங்கள் இலக்கியத்திற்குள் பிரவேசித்த அந்த தருணத்தைப் பற்றி சற்று சொல்லுங்கள்?

தரம் மூன்றில் நான் கல்வி கற்கும் போது பூங்கா என்ற சிறுவர் பத்திரிகையில் தான் என் ஆக்கம் முதன் முதலாக வெளிவந்தது. அதேபோல எனது பெற்றோர் நிறைய சிறுவர் புத்தகங்களை எனக்கு வாங்கித் தந்தார்கள். அப்போதிலிருந்தே புத்தகங்களை வாசிக்கும் பழக்கம்; என்னில் ஏற்பட்டது. அந்த ஆர்வம்தான் என்னை எழுத்துலகுக்குள் இழுத்து வந்தது. ஆரம்பத்தில் தரம் எட்டில் கல்வி கற்கும் போதே பாடசாலை வாசிகசாலையில் இருந்து நீலபத்மநாபன் கதைகள்,; ஜெயகாந்தன் கதைகள்,; நாவல்கள் என்பவற்றை நிறைய வாசித்திருக்கிறேன்.

அவ்வாறு தொடர்ந்த என் ஆவல் சாதாரண தரம் முடிந்த பிறகு பல பத்திரிகைகள் வாசிக்கும் பழக்கத்தை எனக்கு ஏற்படுத்தித் தந்தது. உயர் தரம் முடிந்த பிறகு நான் எங்கள் ஊர் வாசிகசாலைக்குச் சென்று பல புத்தகங்களையும் வாசிப்பேன். அதனால் சிறு சிறு கவிதைகளையும் எழுதி பல பத்திரிகைகளுக்கும் அனுப்பினேன். அவை பல பத்திரிகைகளிலும் வெளிவந்த போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. தொடர்ந்து எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. எனது படைப்புக்களுக்கு களம் அமைத்துத் தந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள்,; வானொலி,; தொலைக்காட்சி>; வலைத்தளங்கள் யாவற்றுக்கும் என் நன்றிகள்.

ஆரம்பத்தில் கவிதைத் துறையில் மட்டும் கால் வைத்த நான் தற்போது சிறுகதை> விமர்சனம்>; சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளிலும் ஈடுபட்டு வருகின்றேன். இதற்குக் காரணம் பல புதியவர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகப்படுத்தி வரும் சகோதரி வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களாவார். அவரது வழிகாட்டுதலின் கீழ்தான் நான் வளர்ந்தேன். அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறக் கடமையாகிறது. அதே போல் சிறுவர் இலக்கியத் துறையில் ஈடுபடக் காரணமாக அமைந்த திருமதி வசந்தி தயாபரனுக்கும்;ரூம் டு ரீட் நிறுவனத்தினரான செல்வி சுரேக்கா தம்பிதுரைக்கும் நன்றி கூறுகின்றேன்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

பதுளை மாவட்டத்தின் தியத்தலாவை என்ற ஊர் என்னுடையது. கஹகொல்லை அல் பத்ரியா முஸ்லிம் மகா வித்தியாலயம்வெலிமடை முஸ்லிம் மகா வித்தியாலயம்> பண்டாரவளை சேர் ராசிக் பரீத் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவி நான். தற்போது பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் உதவி ஆசிரியராக இருக்கின்றேன். இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் மற்றும் முஸ்லிம் கலைஞர் முன்னணி ஆகிய இலக்கிய அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகிக்கின்றேன்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கூட்டங்களை>; இலக்கிய நிகழ்வுகளை>; புத்தக வெளியீடுகளை நடாத்தி வருகின்றது. அவ்வாறான சில நிகழ்வுகளின் போது அதன் தலைவர் நீர்வைப் பொன்னையன்; எனக்கும் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருவதுண்டு. ஒரு சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவின் போது கலந்து கொள்ளும் பேச்சாளர்களில் ஒருவராக என்னையும் நியமித்து எனது கருத்துக்களைச் சொல்லும் சந்தர்ப்பத்தையும் எனக்கு ஏற்படுத்தித் தந்தார். அந்த வகையில் என்னை வழிப்படுத்துபவர்களாக நீர்வைப் பொன்னையன்> சோம சுந்தரம்> கவிஞர் . இக்பால் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்கள் யாவருக்கும் ஏனைய மன்றத்தின் உறுப்பினர்கள் யாவருக்கும் எனது நன்றிகள் என்றும் உண்டு. அதே போல் முஸ்லிம் கலைஞர் முன்னணி அமைப்பின் தலைவர் இசைக்கோ நூர்தீனுக்கும், மதிப்பிற்குரிய கலைவாதி கலீலுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுவரை எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள்?

கவிதை>சிறுகதை> விமர்சனம்;சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வரும் நான் ‘இன்னும் உன் குரல் கேட்கிறது| என்ற கவிதைத் தொகுதியையும் ‘வைகறை| என்ற சிறுகதைத் தொகுதியையும் இதுவரை வெளியிட்டிருக்கிறேன். புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற எனது கவிதைத் தொகுதி; வெளிவந்தது. இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 27 ஆவது வெளியீடாக வைகறை என்ற எனது சிறுகதை நூல் வெளிவந்தது. அதே போல் ரூம் டு ரீட் நிறுவனத்தின் மூலம் எனது 02 சிறுவர் இலக்கிய நூல்களும் ஏனைய மூன்று சிறுவர் இலக்கிய நூல்களும் வெளிவர இருக்கின்றன. மற்றும் மழையில் நனையும் மனசு (கவிதைத் தொகுதி)> திறந்த கதவுள் தெரிந்தவை (விமர்சனத் தொகுதி) ஆகிய நூல்களும் வெளிவர இருக்கின்றன.


உங்கள் கவிதை நூல் மற்றும் சிறுகதை நூல் பற்றி..

புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக இன்னும் உன் குரல் கேட்கிறது என்ற எனது கவிதைத் தொகுதி வெளியீடு செய்யப்பட்டது. கவிஞர் . இக்பால் எனது இந்தத் தொகுதிக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். பதிப்புரையை புரவலர் புத்தகப் பூங்காவின் செயலாளர் எஸ்.. நாகூர் கனி;பின்னட்டைக் குறிப்பை வெலிகம ரிம்ஸா முஹம்மத் எழுதியிருக்கிறார்கள். மொத்தம் 72 பக்கங்களில் 56 கவிதைகள் இந்தத் தொகுதியில் இடம்பிடித்திருக்கின்றன.

அதுபோல இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 27 ஆவது வெளியீடாக வைகறை என்ற எனது சிறுகதை நூல் வெளிவந்தது. நூலுக்கான முன்னுரையை நீர்வை பொன்னையன்;> பின்னட்டைக் குறிப்பை டாக்டர் எம்.கே.முருகானந்தன் எழுதியிருக்கிறார்கள். 114 பக்கங்களில் 21 கதைகளை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் சமூகத்திலிருந்து இன்று நிறைய பெண்கள் எழுத்துத் துறையில் இருக்கிறார்கள். உங்கள் சமூகத்தில் காணப்படும் குறை நிறைகளை உங்கள் இலக்கிய ஆக்கங்கள் மூலம் கொண்டு வர முடியும் என நினைக்கிறீர்களா?

இஸ்லாமிய சமூகத்தில் மட்டுமல்ல அவரவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தின் குறை நிறைகளையும் இலக்கியத்தினூடாக தெரியப்படுத்த முடியும். சமாதானத்துக்கு இலக்கியம் ஒரு பாலமாகவே இருந்து கொண்டிருக்கிறது. மொழி பெயர்ப்புத் துறை சார்ந்த புத்தகங்களை வெளியிடுபவர்கள் ஏனைய சமூகங்களின் பண்புகள்> கலாசாரம்> ஆசாபாசங்கள்> உணர்வுகள் போன்றவற்றை நமக்கு தெரியப்படுத்தும் ஆசான்களாக இருக்கிறார்கள். எனவே சமூகத்தின் கஷ்டத்தையோ மகிழ்வையோ ஒரு எழுத்தாளன் தமது இலக்கியத்தினூடாக தெரியப்படுத்துவதனால் தான் இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமிய சமுதாயத்தின் கோட்பாடுகள்> விழுமியங்கள்> வரையறைகள் போன்ற எல்லா விடயங்களும் இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளன. சொல்லப்பட்டும் வருகின்றன. சமூகத்தைத் தவிர்த்து படைப்புக்ளைப் படைப்பவன் ஒரு படைப்பாளியாக இருக்க முடியாது. எனவே எமது பிரச்சினைகளை எமது படைப்புக்கள் பேச வேண்டும்.

வானொலி> தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனுபவங்கள் உண்டா?

  2006 இல் பிறை எப்.எம் அலைவரிசையில் கவிதை கூறியிருக்கிறேன்.

 இலங்கை வானொலி முஸ்லிம் சேவை கவிதைக்களம் நிகழ்ச்சியில் எனது கவிதை இடம்பெற்றுள்ளது.

  2009 ஜூலை 27ல் நேத்ரா அலைவரிசை முஸ்லிம் நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறேன்.

• 2011 பெப்ரவரி 13 இல் கவிஞர் சடகோபன் அவர்களின் தலைமையில் சக்தி எப்.எம் அலைவரிசையில் கவிராத்திரி நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறேன

 2011 நவம்பர் 07 இல் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் கவிஞர் என். நஜ்முல் ஹூசைன்; தலைமையில் நடைபெற்ற ஹஜ் கவியரங்கம் நிகழ்ச்சியில் கவிதை கூறியிருக்கிறேன

 2011 நவம்பர் 07 இல் நேத்ரா அலைவரிசை தீன்சுடர் முஸ்லிம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இலங்கையின் பிரபல பாடகரும்> இசையமைப்பாளருமான டோனி ஹஸன்; இசையமைத்துப் பாடிய ‘இன்பங்கள் பொங்கும் இரு பெருநாளிலே| என்ற ஹஜ் பெருநாள் பாடலை எழுதியிருக்கிறேன்.

  2012 இல் ஊவா எப்.எம் அலைவரிசையில் கவிதை கூறியிருக்கிறேன்.


உங்களுக்குக் கிடைத்த பரிசுகள் பற்றி?

 2011 ஆம் ஆண்டில் ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும்;புத்தகப் பரிசும் பெற்றுள்ளேன்;.

• 2011 ஆம் ஆண்டில் யாழ் முஸ்லிம் வலைத்தளம்> இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும்> பணப்பரிசும் பெற்றுள்ளேன்.

 2011 ஆம் ஆண்டில் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில்; பாராட்டுப் பத்திரமும்>பணப்பரிசும் பெற்றுள்ளேன்.

 2012 ஆம் ஆண்டில் யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டும் பத்திரமும்> பணப்பரிசும்> பதக்கமும் பெற்றுள்ளேன்.

 2012 ஆம் ஆண்டில் மலையகத்தின் தீப ஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளேன்.        

இலக்கியவாதிகள் பற்றிய உங்கள் கருத்து யாது?

என்னைப் பொறுத்தவரை இலக்கியவாதிகளை நான்கு வகையினராக பிரித்துத் தான் அறிந்து கொண்டேன்.

தான் எழுதும் சமூக அக்கறையுள்ள விடயங்கள் பற்றி சிந்திக்கும் பல இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். அவர்களது எழுத்தும்> செயற்பாடும் ஒரே மாதிரி இருக்கும். அவர்களது எழுத்துக்கள் மக்கள் மனதில் நேர்மறையான கருத்துக்களை தோற்றுவிக்கும். அதனால் பலரும் மனதளவில் மகிழ்வார்கள்.

சிலர் இருக்கிறார்கள். எழுத்து ஒரு பக்கம். வாழ்க்கையோ மறுபக்கம் என்றிருக்கும். தனக்கும்> தான் எழுதும் விடயங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போல இயல்பாக இருப்பார்கள். அத்தகையவர்களை எண்ணினால் வியப்பாக இருக்கிறது.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் தனது பெயர் பத்திரிகையில் அச்சாக வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள். வாசிக்க அசௌகரியப்படும் சில வசனங்களைக் கொண்டு எழுதுவார்கள். அவ்வாறு எழுதி எதிர்மறை விமர்சனங்களால் பிரபல்யமடைய முனைவார்கள்.

மற்றவர்களின் வளர்ச்சியில் பொறாமைப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருவர் முன்னேற்றமடைகிறார் என்று கண்டவுடன் தமக்கு கீழிருந்தோர் சற்றாவது முன்னேறுகிறார்களே என்று சந்தோஷப்பட வேண்டியவர்களே இவ்வாறு இருந்தால் வளரும் சமுதாயம் என்ன செய்ய வேண்டும்? அதாவது கைதூக்கி விட வேண்டியவர்களே கால்வாரி விடும்போது புறமுதுகு காட்டாமல் நிலைத்து நின்று சாதனை புரியும் வல்லமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் நமது வெற்றிக்கு நாம் இடும் முதல் அடிக்கல்;. அதைச் சரியாக செய்தால் போகும் பாதை சீராகிவிடும்.

இவ்வாறு பலதரப்பட்ட எழுத்தாளர்கள் நம் மத்தியில் உள்ளார்கள். நரித்தனமாக நாடகம் போடுபவர் யார், நல் மனதுடன் நட்பு கொள்வோர் யார் என்பதை நாம் தான் அறிந்து கொண்டு பழக வேண்டும்.!!!